
இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி படுகாயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற சண்டையில் பீரங்கி தாக்குதலில் சார்லஸ் அந்தோனி படுகாயமடைந்தார். அவரை சக விடுதலைப் புலிகள் போர்க் களத்திலிருந்து மீட்டு போர் நடைபெறாத பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரபாகரனின் டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை ராணுவத்திடம் அளித்துள்ளார்.
தற்போது தீவிரமாக சண்டை நடந்து வரும் புதுக்குடியிருப்பு பகுதியில் களத்தில் உள்ள தளபதிகளான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து சார்லஸýம் தீவிரமாகப் போரில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது கனடாவில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கனடாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு வந்த இ.மெயில் தகவலிலும் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமச்சந்திரன் கனடாவில் உள்ள இலங்கை தமிழர்களிடம் நிதி வசூல் செய்து, விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வருவதாகவும் இலங்கை பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.
பிரபாகரன் கவலை: சார்லஸ் அந்தோனி காயமடைந்தது குறித்து பிரபாகரன் கடும் கவலை கொண்டுள்ளதாகவும் இ. மெயில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதாகும் சார்லஸ் அந்தோனி, பிரபாகரனின் மூத்த மகன். போரில் உயிரிழந்த தனது நெருங்கிய சகாவின் நினைவாக அவரது பெயரை மூத்த மகனுக்குச் சூட்டியுள்ளார் பிரபாகரன்.
பிரபாகரனுக்கு சார்லஸ் தவிர துவாரகா என்ற மகளும் பாலச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். இதில் துவாரகா தந்தையுடன் உள்ளார். ஆனால் பாலச்சந்திரன் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
"ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங்' படித்துள்ள சார்லஸ் விடுதலைப் புலிகளின் விமானப் படை மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுக்குத் தலைமை வகித்து வருகிறார்.
செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களை புலிகள் பயன்படுத்தி வந்தனர். "ராணுவ தாக்குதலில் புலிகள் தங்களது எல்லா விமான தளங்களையும் இழந்துவிட்டனர். தற்போது அவர்களிடம் போர் விமானம் கிடையாது' என்று இலங்கை ராணுவம் கூறி வருகிறது. ஆனால் அவர்களிடம் இன்னும் விமானம் உள்ளது என்று நம்பப்படுகிறது.
தலைவர் சாவு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரும், புலிகளில் செயற்கைக்கோள் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புப் பிரிவை நிர்வகித்து வந்தவருமான எஸ். கிருபாகரனை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Thursday, April 2, 2009
சார்லஸ் அந்தோனி படுகாயம்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment