
இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி படுகாயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற சண்டையில் பீரங்கி தாக்குதலில் சார்லஸ் அந்தோனி படுகாயமடைந்தார். அவரை சக விடுதலைப் புலிகள் போர்க் களத்திலிருந்து மீட்டு போர் நடைபெறாத பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரபாகரனின் டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை ராணுவத்திடம் அளித்துள்ளார்.
தற்போது தீவிரமாக சண்டை நடந்து வரும் புதுக்குடியிருப்பு பகுதியில் களத்தில் உள்ள தளபதிகளான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து சார்லஸýம் தீவிரமாகப் போரில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது கனடாவில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கனடாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு வந்த இ.மெயில் தகவலிலும் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமச்சந்திரன் கனடாவில் உள்ள இலங்கை தமிழர்களிடம் நிதி வசூல் செய்து, விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வருவதாகவும் இலங்கை பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.
பிரபாகரன் கவலை: சார்லஸ் அந்தோனி காயமடைந்தது குறித்து பிரபாகரன் கடும் கவலை கொண்டுள்ளதாகவும் இ. மெயில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதாகும் சார்லஸ் அந்தோனி, பிரபாகரனின் மூத்த மகன். போரில் உயிரிழந்த தனது நெருங்கிய சகாவின் நினைவாக அவரது பெயரை மூத்த மகனுக்குச் சூட்டியுள்ளார் பிரபாகரன்.
பிரபாகரனுக்கு சார்லஸ் தவிர துவாரகா என்ற மகளும் பாலச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். இதில் துவாரகா தந்தையுடன் உள்ளார். ஆனால் பாலச்சந்திரன் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
"ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங்' படித்துள்ள சார்லஸ் விடுதலைப் புலிகளின் விமானப் படை மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுக்குத் தலைமை வகித்து வருகிறார்.
செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களை புலிகள் பயன்படுத்தி வந்தனர். "ராணுவ தாக்குதலில் புலிகள் தங்களது எல்லா விமான தளங்களையும் இழந்துவிட்டனர். தற்போது அவர்களிடம் போர் விமானம் கிடையாது' என்று இலங்கை ராணுவம் கூறி வருகிறது. ஆனால் அவர்களிடம் இன்னும் விமானம் உள்ளது என்று நம்பப்படுகிறது.
தலைவர் சாவு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரும், புலிகளில் செயற்கைக்கோள் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புப் பிரிவை நிர்வகித்து வந்தவருமான எஸ். கிருபாகரனை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Thursday, April 2, 2009
சார்லஸ் அந்தோனி படுகாயம்
Friday, May 23, 2008
விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவர் மரணம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவர் பாலசேகரம் கந்தையா இலங்கையில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 42.
அவரது மறைவையொட்டி 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளுக்குப் போர் தந்திரங்களை வகுத்துக் கொடுத்தவர். இலங்கை ராணுவத்துக்கு எதிரான பல போர்களில் நேரடியாகப் பங்கேற்றவர். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
மே 20-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவர் இறந்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்தம் இருந்தபோது, சிங்கப்பூரில் 2003-ம் ஆண்டு பாலசேகரம் கந்தையாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் இதயக் கோளாறு ஏற்பட்டு இறந்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் இறந்து விட்டனர். இந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் லண்டனில் 2006 டிசம்பரில் இறந்தார். அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன், இலங்கை விமானப் படை தாக்குதலில் கடந்த ஆண்டு நவம்பரில் இறந்தார்.
தற்போது போர் நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு இலங்கை ராணுவம், போர் விதிகளைமீறி விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்ததுவதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது
கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை விடுதலைப் புலிகளின் சடலங்களாக இலங்கை அரசு கூறிக் கொண்டு வருகிறது.
Monday, May 19, 2008
இலங்கையில் தாக்குதல்-16 புலிகள் சாவு
இலங்கை விமானப்படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் தெற்குப்பகுதியில் புலிகள் பதுங்கியுள்ள இடங்கள் குறித்து ராணுவத்தினர், விமானப்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை, விமானப்படை ஹெலிகாப்டர்கள் விடுதலைப்புலிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் புலிகள் இயக்கத்தினர் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் புலிகள் தரப்பிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்றார். இது தவிர வவுனியாவில் ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் 1 விடுதலைப்புலி கொல்லப்பட்டார்.
Sunday, May 18, 2008
கொழும்பில் மனித குண்டு தாக்குதல்
கொழும்பில் போலீஸôரை ஏற்றிச் சென்ற பஸ் மீது மனித குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 86 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் நாசகர வேலை என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கோட்டை பகுதியில் உள்ள சமுதலோகா விகாரை அருகே வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த 10 பேரில், 3 பெண் போலீஸ் உள்ளிட்ட 8 போலீஸôரும் அடங்குவர். மனித குண்டாக செயல்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வந்து போலீஸ் பஸ் மீது மோதியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
காயம் அடைந்தவர்களில் 50 பேர் சாதாரண பொதுமக்கள். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸôர் காயம் அடைந்தவர்களை வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மனித குண்டு தாக்குதல் சம்பவத்தை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வன்மையாக கண்டித்துள்ளார்.
Tuesday, May 13, 2008
உயர்கல்வியில் கொள்ளை:ராமதாஸ்
உயர்கல்வி மூலம் தனியார் கொள்ளையடிக்கின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களுக்கு ஏற்பத் தகுதியுள்ள மாணவர்கள் இருந்தும் கல்விக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதனால், சமூகத்தில் அபாயகரமான ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
மாநிலத்தின் சில இடங்களில் போலீஸ் துணையுடனும், பல இடங்களில் அரசியல்வாதிகள் துணையுடனும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக மார்ட்டின் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அவர், தலைமறைவாக இருக்கிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பங்கேற்ற விழாவில் மார்ட்டினும் கலந்து கொண்டார். ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. தடை செய்த பொருள்களை பயந்து விற்பனை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது பகிரங்கமாக விற்பனை செய்கின்றனர். வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை தமிழகத்திலேயே அச்சடித்து போலியாக விற்பனை செய்கின்றனர். (கஞ்சா பொட்டலங்களையும், லாட்டரி டிக்கெட்களையும் பத்திரிகையாளர்களிடம் ராமதாஸ் காட்டினார். அப்போது, இன்று காலை வாங்கப்பட்டவை இவை என்று தெரிவித்தார்.)
விலைவாசி உயர்வு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆன்-லைன் வர்த்தகம் தடை செய்யப்படவில்லை. பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சாதனைகளை விட வேதனை தான் அதிகம். ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக, ஆளும் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதல்வரைச் சந்திக்கும்போது நேரடியாகவும், சட்டப் பேரவையிலும் பலமுறை தெரிவித்திருக்கிறோம். அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டினால் முதல்வர் கோபப்படுகிறார்.
""2011-ல் ஆட்சிக்கு வரப்போகிறீர்களே, அப்போது செய்யுங்கள்'' என பதிலளிக்கிறார். இதுபோன்று ஏழுமுறை முதல்வர் கூறியுள்ளார். கட்டுப்படுத்த முடியாத மது, கஞ்சா, லாட்டரி சீட்டு ஆகியவை மூலம் ""இளைஞர்களே சீக்கிரம் அழிந்து போங்கள்'' என்பது போல் அரசின் செயல்பாடு உள்ளது என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
இலங்கை கடற்படை கப்பல் மூழ்கடிப்பு
இலங்கையின் கடற்படைக் கப்பலை திரிகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகள்
சனிக்கிழமை குண்டு வைத்து மூழ்கடித்தனர்.
அதிகாலை 2.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. விடுதலைப் புலிகளின் கடல் புலிகள், தண்ணீருக்கு அடியில் சென்று, எம்.வி. இன்விசிபிள் என்ற கப்பலுக்கு குண்டு வைத்து வெடிக்கச் செய்தனர். 15 நிமிடங்களில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது. கடல் புலிகளில் கங்கை அமரன் பிரிவு என்ற ஒரு பிரிவு உள்ளது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
கப்பல் மூழ்கியபோதும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்தது. இந்த கப்பல் திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு, கடற்படைக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது. தாக்குதல் நடந்தபோது, அந்த கப்பலில் நிறைய வெடிகுண்டுகள் இருந்தன. விடுதலைப் புலிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்களை நடுக்கடலில் கண்டுபிடித்து அழிக்கும் பணியிலும் இந்த கப்பல் ஈடுபட்டிருந்தது. அக் கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
